பொதுமறையோன்!
ஒப்பில்லா உயர்மறையாய் விளங்கும்செந் தமிழில்
.. உலகத்து மாந்தரினம் உவந்தெற்கும் மறையாய்
செப்பிவைத்தான் திருக்குறளைச் சிறப்பாகத் தமிழன்
.. செந்தமிழே செம்மொழியாய் சிறக்கஒரு நூலே
இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
.. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறுமொழிக் குண்டோ?
அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
.. அளிக்கின்ற திருக்குறள்நம் அருந்தமிழர் சொத்து!

அறமுரைக்கும் திருக்குறளைத் தம்மொழியில் பெயர்த்த
.. அகிலமொழி யினர்சமய வழிமுறைகள் கடந்து
சிறப்புறவே குறள் கூறும் கருத்துரைகள் உணர்ந்து
.. செய்கின்ற இல்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
திறன்வியந்து போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
.. திக்கெல்லாம் நம்பெருமை திகழவைக்கும் குறளே
மறத்தமிழர் மாநிதியாய்க் குறளினரும் பொருளை
.. மறவாமல் ஏற்றிடுவோம் மாண்புகளே பெருகும்!

ஒன்றேமுக் காலடியில் உணர்ந்துபொருள் மாந்தர்
.. உயிராகப் போற்றிஉயர் உணர்வோடு வாழ்ந்தால்
பொன்றுகிற பெருமையெலாம் புகழ்மணமே வீசும்
.. பூதலத்தில் உயர்நீதி புகலுமிந்த நூல்போல்
குன்றெனவே காலத்தை வென்றுலகில் நிலைக்கும்
.. கூரறிவுச் சீராக்கும் வேறுநூலெங் குண்டு?
என்றைக்கும் வாழுண்மை இவ்வுலகோர் அறிய
.. இயம்பிவைத்த வள்ளுவன்பேர் இசைப்பதுநம் கடனே!

No comments:
Post a Comment