உணர்வு
இருட்டைக் கிழிக்க எழுவாய் இளைஞா
திருட்டை ஒழிக்கும் அணியாய்ப் - புரட்டில்
கொழுப்பவர் ஆணவம் கொல்லத் துணிவாய்
ஒழுங்கே உனக்காம் உரம்
திருட்டை ஒழிக்கும் அணியாய்ப் - புரட்டில்
கொழுப்பவர் ஆணவம் கொல்லத் துணிவாய்
ஒழுங்கே உனக்காம் உரம்
பேச்சினில் வீரம் பெரிதாய்க் காட்டுதல்
ஆச்சரியம் ஆகா(து) அறிவாயே - மூச்சாகத்
தாய்மொழி போற்றத் தவறுபவன் உள்ளந்தான்
நோய்க்கொண்ட(து) என்றே நுவல்
ஆச்சரியம் ஆகா(து) அறிவாயே - மூச்சாகத்
தாய்மொழி போற்றத் தவறுபவன் உள்ளந்தான்
நோய்க்கொண்ட(து) என்றே நுவல்
ஆடை தமிழனாய்க் காட்டினும் வீரமாய்
மேடை முழக்கும் இன உணர் - வோடுநீ
வாழ்வதாய்த் தோற்றிடினும் வஞ்சத்தால் வாடாத
ஆழ்மனச் சொத்தே அறிவு
மேடை முழக்கும் இன உணர் - வோடுநீ
வாழ்வதாய்த் தோற்றிடினும் வஞ்சத்தால் வாடாத
ஆழ்மனச் சொத்தே அறிவு
உணர்வால் தமிழனாய் உள்ளவன் நோக்கும்
மணக்கும் தமிழாய்த்தான் மாண்பைப் - பணந்தான்
தந்திடும் என்றுதினம் தாய்மொழி விற்போர்க்குச்
சொந்தமதி சொத்தைஎனச் சொல்
மணக்கும் தமிழாய்த்தான் மாண்பைப் - பணந்தான்
தந்திடும் என்றுதினம் தாய்மொழி விற்போர்க்குச்
சொந்தமதி சொத்தைஎனச் சொல்
No comments:
Post a Comment