ஊக்கம்
ஊக்கம் என்பது உள்ளச் சொத்து - அது
உயர்வையும் புகழையும் விளைத்திடும் வித்து
ஏக்கம் கொள்ளா நிலையுண்டாக்கும் - பெரும்
இழப்பே நேரினும் மீட்டுச் சேர்க்கும்!
உயர்வையும் புகழையும் விளைத்திடும் வித்து
ஏக்கம் கொள்ளா நிலையுண்டாக்கும் - பெரும்
இழப்பே நேரினும் மீட்டுச் சேர்க்கும்!
செல்வோம் என விலகும் தளர்வெல்லாம் - பெரும்
சிறப்பினை ஈந்திடும் உழைப்போர்க்கெல்லாம்
இல்லை எனும்நிலை இடரினுள் தள்ளும் - மன
எழுச்சியே வெற்றியின் ஏணியாக் கொள்ளும்
சிறப்பினை ஈந்திடும் உழைப்போர்க்கெல்லாம்
இல்லை எனும்நிலை இடரினுள் தள்ளும் - மன
எழுச்சியே வெற்றியின் ஏணியாக் கொள்ளும்
ஏனைய செல்வம் பெருகினும் குறையும் - உரம்
ஏற்குமூக்கத்தால் வளர்ச்சி எத்துறையும்
கூனிலாக்குணம்தரும் மிகநலம் பலவும் - சீர்க்
கொள்கையால் வலம்வரும் புகழ்மணம் நிலவும்
ஏற்குமூக்கத்தால் வளர்ச்சி எத்துறையும்
கூனிலாக்குணம்தரும் மிகநலம் பலவும் - சீர்க்
கொள்கையால் வலம்வரும் புகழ்மணம் நிலவும்
விழைவுகள் வளரிடம் நெஞ்செனும் நிலமே - பயிர்
விளைவதன் வெற்றியே ஊக்கமாம் பலமே
உழைப்பினால் பெரும்பயன் உவப்பினைச் சேர்க்கும் - பிறர்க்(கு)
உதவிடும் விரிமனப் பெருமையும் வாய்க்கும்!
விளைவதன் வெற்றியே ஊக்கமாம் பலமே
உழைப்பினால் பெரும்பயன் உவப்பினைச் சேர்க்கும் - பிறர்க்(கு)
உதவிடும் விரிமனப் பெருமையும் வாய்க்கும்!
தளர்ச்சியின் முற்றுகை தருமுடல் முதுமை - உளம்
தளரா நிலையதன் செயல்முறை புதுமை
உளத்திடம் துயர்மலை பிளந்திடும் உளியாம் - நம்
உடல்பெற வழங்கிடும் வலிவுடன் பொலிவாம்
தளரா நிலையதன் செயல்முறை புதுமை
உளத்திடம் துயர்மலை பிளந்திடும் உளியாம் - நம்
உடல்பெற வழங்கிடும் வலிவுடன் பொலிவாம்
ஊக்கம் என்பதோர் ஊன்றுகோல் திண்மை - அதை
உடையவர் வெற்றியை அடைவதும் உண்மை
ஆக்கம் அவர்வழி தேடியே சேருமே - சீர்
அளிக்கும் அவர்புகழ் ஏடுகள் கூறுமே!
உடையவர் வெற்றியை அடைவதும் உண்மை
ஆக்கம் அவர்வழி தேடியே சேருமே - சீர்
அளிக்கும் அவர்புகழ் ஏடுகள் கூறுமே!
No comments:
Post a Comment