மண்ணில் வாழ் தெய்வம்
கற்பனைகள் கவர்ச்சிநிறை கதைகள் ஆக்கும்
.. கற்பவர்கள் உள்ளங்கள் பதிவை ஏற்கும்
அற்புதங்கள் அறிவுக்குப் பொருந்தா தென்றால்
.. ஆய்ந்துணர்வோர் அதீதமென ஒதுங்கிப் போவார்
சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்த பாட்டைச்
.. சுவைத்தடையும் இன்பசுகம் மதிமயக்கும்
உற்பத்தி நேர்மையதன் உள்ளடக்கம்
.. உண்மைக்குப் புறமென்றால் ஒதுக்க லாமே!
.. கற்பவர்கள் உள்ளங்கள் பதிவை ஏற்கும்
அற்புதங்கள் அறிவுக்குப் பொருந்தா தென்றால்
.. ஆய்ந்துணர்வோர் அதீதமென ஒதுங்கிப் போவார்
சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்த பாட்டைச்
.. சுவைத்தடையும் இன்பசுகம் மதிமயக்கும்
உற்பத்தி நேர்மையதன் உள்ளடக்கம்
.. உண்மைக்குப் புறமென்றால் ஒதுக்க லாமே!
உழைக்காமல் உண்பதுமோர் ஈனத்தன்மை
.. உடலிலுரம் இருக்க அதை முடக்கல் கேடு!
தழைசருகாய் வீழ்ந்தாலும் மருந்துமாகும்
.. தக்கமதி யிருந்தாலும் தன்னலத்தால்
விழைவுகளைப் பெருக்கிநிதம் பிறர்தாள் வீழ்ந்து
.. வேண்டியதை வஞ்சகமாய்த் திரட்டிக் கொள்வோன்
பிழையாக மனிதனெனப் பிறந்து விட்டான்
.. பெருங்கேடு, அவனாலே அழியும் பூமி!
.. உடலிலுரம் இருக்க அதை முடக்கல் கேடு!
தழைசருகாய் வீழ்ந்தாலும் மருந்துமாகும்
.. தக்கமதி யிருந்தாலும் தன்னலத்தால்
விழைவுகளைப் பெருக்கிநிதம் பிறர்தாள் வீழ்ந்து
.. வேண்டியதை வஞ்சகமாய்த் திரட்டிக் கொள்வோன்
பிழையாக மனிதனெனப் பிறந்து விட்டான்
.. பெருங்கேடு, அவனாலே அழியும் பூமி!
அன்பினையும் அறிவினையும் ஆண்டு நிற்கும்
.. அகந்தன்னை ஆண்டவன்வாழ் கோயில் என்பார்
என்பாலும் தசையாலும் நரம்பி ரத்தம்
.. இன்னபிற வற்றாலும் இணைத்தியங்கி
முன்னோட்டும் சாரதியாம் நெஞ்சுக் காணை
.. மூளையிட முறைதவறா வாழ்வாம் ஆட்சி
இன்னலையும் இன்பமுடன் ஏற்றுக் கொள்ளும்
.. எனில்மனிதர் மண்ணகத்தே தெய்வம் ஆவார்!
.. அகந்தன்னை ஆண்டவன்வாழ் கோயில் என்பார்
என்பாலும் தசையாலும் நரம்பி ரத்தம்
.. இன்னபிற வற்றாலும் இணைத்தியங்கி
முன்னோட்டும் சாரதியாம் நெஞ்சுக் காணை
.. மூளையிட முறைதவறா வாழ்வாம் ஆட்சி
இன்னலையும் இன்பமுடன் ஏற்றுக் கொள்ளும்
.. எனில்மனிதர் மண்ணகத்தே தெய்வம் ஆவார்!
No comments:
Post a Comment