புதையல்
உருவின்றி உலவுகின்ற காற்றும் அச்சம்
.. உருவாக்கக் கிளம்புகின்ற இடியும் மின்னல்
தருஒளியின் நொடிநேர வீச்சும் நீரைத்
.. தரையோடச் செய்கின்ற முகிலும் நாளும்
நிறமாற்றம் அடைகின்ற பொழுதும் யாவும்
.. நீள்வானப் புதையலென எனக்குத் தோன்றும்!
சுரமாகச் செவிசேரும் ஒலியும் பாயும்
.. சூறைதென்றல் சூடுகுளிர் வானின் சொத்தே!

பூமிக்குள் கனிவளங்கள் புதையல் என்றால்
.. புலமையுள்ளோர் நெஞ்சறிவுப் புதையல் ஆகும்
நாமிங்கு கற்கின்ற பாடமெல்லாம்
.. நல்லாய்வாம் ஆழிவிளை பவளம் முத்து!
ஆம் இங்கே முன்னோர்தம் வரலாறெல்லாம்
.. அனுபவமாம் நவமணியின் புதையல் ஆகும்
கோமுட்டி கோபுரமே சாய்ந்த தென்னும்
.. குள்ளமனம் கொள்ளவஞ்சப் புதையல் அன்றோ?

இளவிதவைக் கண்ணீரில் இயைந்திருக்கும்
.. ஏக்கத்தைத் துயரத்தின் புதையல் என்றால்
வளவாழ்வுப் பேராசை வலையாய் நீசி
.. வளைக்கின்ற கண்காமப் புதையல் தானே
உளங்கொண்ட கருத்துகளை விளக்குங் காட்சி
.. ஒளிபரப்பும் விழிஉண்மைப் புதையல் என்போம்
களம் எதுவாய் இருந்தாலும் நடத்தை பேச்சால்
.. களைகட்டும் செயல்செம்மைப் புதையல் ஆமே!

No comments:
Post a Comment