தாய்ப்பால்
தாய்மொழியில் ஆண்டவனை வணங்கச் சென்றால்
.. தடுப்பவனைத் தமிழாநீ மேலோன் என்பாய்
வாய்மொழியில் நல்லதமிழ் பேசக் கூட
.. வக்கற்ற நிலையில்நீ இருக்கின் றாயே!
தேய்வடைய விடுவாயா தன்மானத்தை
.. திருடுவஞ்சம் சூதுசெய்வோர் உன்னைச்சூழ
ஆய்ந்துணர்ந்து பாராமல் அடிமைப் புத்தி
.. அகலாமல் ஒருவாழ்வா அறிவெதற்கு?
.. தடுப்பவனைத் தமிழாநீ மேலோன் என்பாய்
வாய்மொழியில் நல்லதமிழ் பேசக் கூட
.. வக்கற்ற நிலையில்நீ இருக்கின் றாயே!
தேய்வடைய விடுவாயா தன்மானத்தை
.. திருடுவஞ்சம் சூதுசெய்வோர் உன்னைச்சூழ
ஆய்ந்துணர்ந்து பாராமல் அடிமைப் புத்தி
.. அகலாமல் ஒருவாழ்வா அறிவெதற்கு?
பிறநாட்டு நல்லறிஞர் தமிழின் தொன்மைப்
.. பெருமையினைப் பலவாறாய் ஆய்ந்து சொல்ல
அறநெறிகள் மறமாட்சி முறையில் வல்ல
.. ஆன்றோர்கள் யாத்தவள இலக்கியங்கள்
மறப்பாயா மறுப்பாயா மடத்தில் ஆழ்ந்து
.. மதிமாற்றம் செய்பவரை மதிக்கின்றாயா?
துறவறத்தில் மெய்ப்பொருளை உணர்தல் விட்டுத்
.. தூய்மையிலார் தமைத்தோளில் சுமக்கின்றாயே!
.. பெருமையினைப் பலவாறாய் ஆய்ந்து சொல்ல
அறநெறிகள் மறமாட்சி முறையில் வல்ல
.. ஆன்றோர்கள் யாத்தவள இலக்கியங்கள்
மறப்பாயா மறுப்பாயா மடத்தில் ஆழ்ந்து
.. மதிமாற்றம் செய்பவரை மதிக்கின்றாயா?
துறவறத்தில் மெய்ப்பொருளை உணர்தல் விட்டுத்
.. தூய்மையிலார் தமைத்தோளில் சுமக்கின்றாயே!
தாய்மொழிச்சொல் பொருளுணர்ந்து சரியாய்ப் பேசத்
.. தவறுகின்ற நீதானா வந்தோர் சொல்லும்
வாய்மொழியைப் புரியாது மேல்மேல் என்பாய்
.. வளர்குழவி தாய்ப்பாலில் ஊட்ட மின்றேல்
நோயெதிர்க்கும் உரனின்றி நோஞ்சான் ஆகும்!
.. நுண்ணறிவைத் தாய்மொழியே வளர்க்கும் உண்மை
சேய்படிக்கப் பிறமொழியைத் திணிக்கும் நீதான்
.. செத்தமொழி சிறப்பென்றாய்! பித்தா போடா!
.. தவறுகின்ற நீதானா வந்தோர் சொல்லும்
வாய்மொழியைப் புரியாது மேல்மேல் என்பாய்
.. வளர்குழவி தாய்ப்பாலில் ஊட்ட மின்றேல்
நோயெதிர்க்கும் உரனின்றி நோஞ்சான் ஆகும்!
.. நுண்ணறிவைத் தாய்மொழியே வளர்க்கும் உண்மை
சேய்படிக்கப் பிறமொழியைத் திணிக்கும் நீதான்
.. செத்தமொழி சிறப்பென்றாய்! பித்தா போடா!
யாதும் ஊர் யாவருமே கேளிர் என்றே
.. யாவர்க்கும் சொல்லி நீயே மாறு கின்றாய்
மேதினியே வள்ளுவரைப் போற்றும் போது
.. மூடங்கள் அவர்சிலையை மூடிவைக்கும்
வேதனையே இயற்கைதரும் ஆற்று நீரை
.. விடமறுக்கும் கடையனுக்கேன் ஒருமைப்பாடு?
போதனைகள் ஏறவில்லை தனிநாட்டானா?
.. போகிறதே மின்சாரம் இங்கிருந்து?
.. யாவர்க்கும் சொல்லி நீயே மாறு கின்றாய்
மேதினியே வள்ளுவரைப் போற்றும் போது
.. மூடங்கள் அவர்சிலையை மூடிவைக்கும்
வேதனையே இயற்கைதரும் ஆற்று நீரை
.. விடமறுக்கும் கடையனுக்கேன் ஒருமைப்பாடு?
போதனைகள் ஏறவில்லை தனிநாட்டானா?
.. போகிறதே மின்சாரம் இங்கிருந்து?
வந்தாரை வாழ்வைப்பாய் சொந்த மண்ணில்
.. வாழ்விழந்த உன்னவனை அனாதை என்பாய்
நொந்தழியும் சேதிகளைக் கேட்கின்றாயே
.. நோகாதா உன்னிதயம் தசை ஆடாதா?
பந்தாடு கின்றாரே தமிழ்மானத்தை
.. பண்பாட்டுச் சீரழிவைப் பார்க்கின்றாயே
மந்தை ஆடா! ஏடா நீ உயிராய் மானம்
.. மதித்த இனம் துதி பாடும் கதியா இன்று?
.. வாழ்விழந்த உன்னவனை அனாதை என்பாய்
நொந்தழியும் சேதிகளைக் கேட்கின்றாயே
.. நோகாதா உன்னிதயம் தசை ஆடாதா?
பந்தாடு கின்றாரே தமிழ்மானத்தை
.. பண்பாட்டுச் சீரழிவைப் பார்க்கின்றாயே
மந்தை ஆடா! ஏடா நீ உயிராய் மானம்
.. மதித்த இனம் துதி பாடும் கதியா இன்று?
அண்டையுள்ளோர் தன்னலத்தால் ஒன்றுகூடி
.. ஆனவழியாவிலுமே முன்செல்கின்றார்
சண்டையிட்டு மொழிவளர்ச்சிக்கான யாவும்
.. சாதிக்கின்றாரிங்கே நமக்குள் நாமே
முண்டிமோதி மண்டையுடைத்துக் கொள்கின்றோம்
.. முனைமழுங்கிப் போனவாளைக் கூர்செய் நன்றே
தொண்டருக்கு வழிகாட்டிச் செல்வோன் முன்னே
.. துடிப்போடு செல்லட்டும், தொடர்வோம் வெல்வோம்!
.. ஆனவழியாவிலுமே முன்செல்கின்றார்
சண்டையிட்டு மொழிவளர்ச்சிக்கான யாவும்
.. சாதிக்கின்றாரிங்கே நமக்குள் நாமே
முண்டிமோதி மண்டையுடைத்துக் கொள்கின்றோம்
.. முனைமழுங்கிப் போனவாளைக் கூர்செய் நன்றே
தொண்டருக்கு வழிகாட்டிச் செல்வோன் முன்னே
.. துடிப்போடு செல்லட்டும், தொடர்வோம் வெல்வோம்!
No comments:
Post a Comment