உயர் நெறி
எழில்காட்டும் காகிதப்பூ ஏராளம்தான்
.. எண்ணற்ற வண்ணத்தில் வேலி யோரம்
பொழிலிடையே சிறுசெடியில் ரோசா ஒன்றும்
.. போவோரின் நாசிக்குள் மணத்தை ஏற்றும்
விழியிரண்டும் வெளிவனப்பை விருந்தாய்க் கொள்ளும்
.. விரும்புநறு மணத்துக்கோர் உருவம் இல்லை
வழிப்போக்கன் சிந்தனைக்கு வெளியும் உள்ளும்
.. வளர்பவையால் கிளர்ந்தெழும் கற்பனையாம் ஊற்றே!

ஊற்றுகள் சுரந்தோடி ஆற்று வெள்ளம்
.. உருவாக விரைந்தேகி வயற்புறத்தில்
நாற்றாக வளர்பயிர்கள் நல்விளைவை
.. நல்கிடவே வாய்க்காலின் வழியே சென்று
சேற்றுக்குப் பெருமையினைச் சேர்க்கும் நீர்தான்
.. செழுமையுறு பயிராகி உயிர்வளர்க்கும்!
மாற்றங்கள் அறிவியலால் விரிந்த போதும்
.. மண்வளர்க்கும் பயிர்நீக்கு மாற்றே யில்லை!

பொறிநுகர்ச்சிப் புலனுணர்வாய் விரியும் சிந்தை
.. பொதுப்படையாய் உயிர்வகைக்குப் பொருந்த வில்லை
தறிகெட்டுப் பாய்கின்ற வேகம் கொண்டால்
.. தரம்தப்பும் நிலையிலுயிர் திறமும் சாயும்!
குறிதப்பா(து) அம்பெய்து வீழ்த்த வல்லார்
.. கொடுங்காட்டில் குள்ளநரி வேட்டை ஏலார்;
நெறிமுறைகள் உயர்ந்தவையால் உயர்வாய் நின்றால்
.. நெடும்புவியில் கெடுதியிலா நிகழ்வே எங்கும்!

No comments:
Post a Comment