மாந்தர் தாமா?
நிலைவசதி கூடியதாய் நெடும்புகழைக் கொண்டாலும்
.. நீபேசும் தாய்மொழிதான் இனத்தின் பேராம்!
தலைநிமிர்ந்து நடந்தாலும் தாய்மொழியைப் பேசாதான்
.. தன்மானம் இலாதவனாய்த் தரத்தில் தாழ்வான்!
கலைவல்லான் பிறமொழியில் கானமழை பெய்தாலும்
.. கருத்துணர்ந்தோர் பாராட்டால் தானே இன்பம்?
விலைகொடுத்தா இனவுணர்வை வாங்கிவைத்துக் கொள்வார்?
.. விதைவீறு கொண்டதெனில் விளைவேன் வீழ்ச்சி?

அறிவுவளம் திறமைநலம் அனைத்திலுமே தேர்ந்தவராய்
.. அகிலமெலாம் பேர்நிறுத்தும் தமிழினத்தான்
சிறப்புமிகு தாய்மொழியைச் செம்மொழியாய்க் கண்டபினும்
.. செல்லபிள்ளை பிறமொழியில் படிக்க வைப்பான்!
உறவுபுதிதாக வந்தால் உயிர்கொடுத்த அன்னைதனை
.. ஒதுக்கிவிடும் இழிந்தகுணம் மகனுக்காமா?
இறந்தமொழி தனைத்தலையில் ஏற்றி வைத்துக் கூத்தாடும்
.. இழிநிலையில் எத்தனை நாள் இன்பம் காண்பாய்?

தகுதிகண்டு பாராட்டும் தன்மையினைத் தாரைவார்த்துத்
.. தாளத்தைப் போட்டபின் பாட்டுப் பாடி
மிகுதியுமாய்க் குழைவதுவே மேனிலையில் சேர்த்துவிடும்
.. மிடுக்குநடை தனக்குவரும் எனும்நினைப்பில்
நகும்நிலையில் தாம்வீழ்ந்து நாசமுறவா வாழ்க்கை?
.. நமையன்றி நம்மரபைக் காப்பார் யாரோ?
பகுத்தறிவைப் பெற்றிருந்தும் பாதந்தாங்கியே வாழ்ந்து
.. பழம்பெருமை அழிப்பவரும் மாந்தர் தாமோ?

No comments:
Post a Comment