Sunday, November 18, 2012

இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
 
ஆசை காட்டி மாசைச் சேர்ப்பதும்
காசை விரும்பிக் கலகம் செய்வதும்
ஏசி மகிழ்வதும் வேசியின் தொடர்பும்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்றே வளர்க்கும் நெஞ்சம் சிலர்க்கு!
 
வஞ்ச நெஞ்சமே கெஞ்சலில் கொஞ்சலில்
பஞ்சம் இன்றிப் பக்குவம் மிஞ்சும்
விஞ்சிப் போதலில் எஞ்சுதல் துன்பமே
தஞ்சம் அடைபவர் தாள்களில் வீழ்ந்தால்
தலைநிமிர் ஆணவம் தாவும் விண்ணில்!
 
குனியக் குனியக் குட்டும் பேர்க்கும்
இனியும் தொடரும் எனுமெதிர் பார்ப்பே
இன்னும் கொஞ்சம் முயன்றால் வெற்றி
இன்னும் உயரே போனால் அவலம்
ஏற்படும் எனும் எச்சரிக்கையும் தேவை!
 
இணக்கம் என்றால் இன்னும் கொஞ்சம்
பிணைப்புடன் இருப்பது பெரும்பிழை அன்று
பிணக்கும் நேரம் பெர்ம் தொடராயின்
இணங்கும் வாய்ப்பே இல்லையென் றாகும்
அணங்கலங்காரம் அளவுடன் இருப்பதும்
மணப்பொருள் பூச்சு மட்டுடன் ஏற்பதும்
புகழும் பேச்சின் போக்கும் நோக்கும்
தகும்நிலைக் களவு தரத்தினில் வேண்டுமே!

No comments:

Post a Comment