வெல்லும் புகழ்
விண்ணகத்தில் கண்சிமிட்டும் எண்ணிறந்த மீன்கள் - அவை
வெண்ணிலவின் தண்படையாம் விளக்காயிருள் விலக்கும்
மண்ணகத்தில் புகழுடையோர் விண்மீன்கள் போலே - அவர்
மணம்பரப்பி பெயர்நிலைக்க வாழ்கின்ற தாலே!
மண்ணுலக வாசிகட்கு நட்சத்திர ராசி - இதில்
மாந்தராக வாழ்பவர்கள் எத்தனை பேர் யோசி!
கண்ணெதிரே பிறர் துயரம் கண்டதும் கலங்கும் - மனம்
கொண்டவரே மாந்தரெனில் குவலயம் துலங்கும்!

இயலுதவி செய்யுமந்த ஈகைஎனும் தன்மை - கொண்டு
இருப்பவரே இருளிஒளி யேற்றிவைப்பார் நன்மை
செயல்முறையில் பொதுநலத்துச் சிந்தையர் சிறந்தோர் - எவர்
சேருமிடம் சிறந்திடுமோ அவரே தான் பிறந்தோர்
எளிமையெனும் நிலையினிலும் வாழ்க்கையில் நிறைவு - மனம்
இருந்துவிடில் அறிவுநிதி நிறைவிலிலை குறைவு
தெளிவுடைய பாடமென விளங்க ஒரு சான்றாய் - நடை
தேர்ந்தவனாய் நீயிருந்தால் தாழ்ந்தவனாய்த் தோன்றாய்!

புலமையினால் புரிசெயலில் புகழ்தழுவ நின்றால் - உனைப்
புவனமெலாம் போற்றுநிலை வந்தணைக்கும் நன்றாய்!
கலைஞனெனக் கவிஞனெனப் பரிசுகளை வென்றால் - புவி
கண்டபலன் உண்டதிலே மண்டுபுகழ் கொண்டாய்
தலைவரெனத் தொண்டரெனத் தன்னலமில் சேவை - செயும்
தகுதியிலே இசைத்திடுவார் புகழொளிரும் பாவை!
நிலைதவறும் நேரத்திலும் நேர்மைவழி செல்லும் - நன்
நெஞ்சுடையார் மின்னுபுகழ் மண்ணுலகை வெல்லும்!

No comments:
Post a Comment