திடம் என்று...
பகுத்தறிவால் மிருகக் குணப்
.. பற்றறுக்க வில்லை யென்றால்
செகத்தில் உலர்சருகெனவே
.. செத்தொழிதல் மேலல்லவா?
பின்பற்றிச் செல்வதற்கே
.. பிறந்துள்ளேன் என்பதுவே
என்பேறு என்றிருப்பேன்
.. இழிந்தவனே எனல் தவறா?
.. பற்றறுக்க வில்லை யென்றால்
செகத்தில் உலர்சருகெனவே
.. செத்தொழிதல் மேலல்லவா?
பின்பற்றிச் செல்வதற்கே
.. பிறந்துள்ளேன் என்பதுவே
என்பேறு என்றிருப்பேன்
.. இழிந்தவனே எனல் தவறா?
தடம்பற்றி நடவாமல்
.. தன்னலத்தின் அடியொற்றும்
மடம் கொண்டோர் மலிவாக
.. இடம் அடைத்துக் கொளல் நலமா?
கடனாற்றும் நல்லவர்கள்
.. கடனாளி யாய்க் கிடக்க
கொடியவர்கள் எல்லோரும்
.. கொடிப்பிடித்து நடந்திடவோ?
.. தன்னலத்தின் அடியொற்றும்
மடம் கொண்டோர் மலிவாக
.. இடம் அடைத்துக் கொளல் நலமா?
கடனாற்றும் நல்லவர்கள்
.. கடனாளி யாய்க் கிடக்க
கொடியவர்கள் எல்லோரும்
.. கொடிப்பிடித்து நடந்திடவோ?
படிந்தவராய்ப் படித்தவரும்
.. அடியாட்கள் படையினிலா?
கடிவாளம் இலாக் குதிரை
.. கடும்வேகம் கொடுங்கேடே
விடிவெள்ளி எவரென்னும்
.. விழிப்புணர்வுத் தேடலிலே
முடிவான விடைகாணும்
.. திடம் என்று அடைவதுவோ?
.. அடியாட்கள் படையினிலா?
கடிவாளம் இலாக் குதிரை
.. கடும்வேகம் கொடுங்கேடே
விடிவெள்ளி எவரென்னும்
.. விழிப்புணர்வுத் தேடலிலே
முடிவான விடைகாணும்
.. திடம் என்று அடைவதுவோ?
No comments:
Post a Comment