Tuesday, August 14, 2012

பொடியன் நானே!

பொடியன் நானே!
 
மாற்றாரை மதிக்கின்ற மாந்த நேயம்
.. மறுப்பினையும் நாகரிக மாக்கும் பேச்சு
வீற்றிருந்த பதவிக்கு மாண்பைச் சேர்க்கும்
.. வினைவலிமை மனம்காட்டும் தூய்மை வாய்மை
நேற்றிருந்த பெருமைகளை வெளிப்ப டுத்தும்
.. நினவாற்றலுடன் கவரும் கருத்து வீச்சு
தூற்றிடுவோ ருந்தொடர்ந்து கேட்கும் பேச்சின்
.. துணையிருந்த அண்ணாகைப் பொடியன் நானே!
 
எளியவரின் மனமேற்கப் புரியும் சொற்கள்
.. எள்ளிநகை யாடலிலும் துள்ளும் யின்பம்
புளியேப்பக் காரர்களின் புரட்டும் போக்கும்
.. புரியவைத்துத் தெளிவூட்டும் விரிந்த நோக்கு
துளியளவும் அகந்தைதனைக் கொள்ளா உள்ளம்
.. தொண்டரெலாம் அண்ணாவென் றழைக்கும் பாசம்
ஒளியேற்ற விரலிடுக்கில் அளவாய் நின்று
.. உறிஞ்சியபின் பொருள்பெருக்கும் பொடியன் நானே!
 
எழுத்தாலும் பேச்சாலும் எழுச்சி மூட்ட
.. எடுத்தபொடி அடுத்தபடி வேகம் கூட்டும்
அழுத்தமுடன் பெரியாரின் கொள்கைக் கொத்தே
.. ஆட்சியினை நடத்தியவர் மூக்குச் சொத்தாய்
நுழைந்தபெரும் பெருமைக்கே இருப்பானேன்நான்!
.. நுண்மதியின் சுறுசுறுப்பின் பொறுப்பும் ஆனேன்!
அழுக்கேற்றுவேன் எனினும் உடன்பிறப்பின்
.. அகந்தூய்மை செய்த அண்ணா பொடியன் நானே!

No comments:

Post a Comment