Sunday, August 19, 2012

பருவம்

பருவம்
 
இயல்பாகப் பழுக்காத ஒன்றை நாமும்
.. எழுமாசை மிகுதியினால் முன்ன தாகச்
செயற்கைவழி பலவந்தப் படுத்தும் போது
.. சேராது சாறோடு சத்தும் ஒத்து!
சுயமாக அறிகின்ற சொந்த புத்தி
.. சொலக் கேட்டுத் தெரிந்துகொள் வதினும் மேலாம்
முயலாமல் வெற்றியை நாம் எட்டல் இல்லை
.. முன்னேற்றம் இயல்பென்றால் மகிழ்ச்சி எல்லாம்!
 
முதிர்காலப் பக்குவத்தில் கதிர றுப்பார்
.. முற்றிவிடின் விழுந்துவிடும் உழைப்பே வீணாம்
எதிர்நோக்கும் காலத்தில் தெளிவு தேவை
.. என்றாலும் புதிர் இயறகை விதியும் மாறும்!
நதிநீர்போல் திரும்பாமல் ஓடும் காலம்
.. நழுவவிட்டால் அதுநம்மை நலிவில் தள்ளும்!
விதிமுறைகள் மீறாது விரையும் காலம்
.. வீண்செய்து பின் ஓலம் இட்டென் செய்ய?
 
காலம்பொன் போன்றதென்று மதிப்பாய்ச் சொல்வோம்
.. கையிலதைத் தக்கவைத்துக் கொள்ளல் ஆமா?
காலத்தைக் கருத்தாகக் கடைபிடித்துக்
.. கடனாற்றல் வாழ்க்கைக்கு வெற்றிச்  சேர்க்கும்
வேலாயு தம்கூர்மை சிதைந்திருக்க
.. விளங்காதவன் அதனை வீசல் வீணே
ஞாலத்தின் ஓட்டத்தில் பருவம் காணும்
.. நியதிக்கு மீறுவதும் நியாயம்தானா?

No comments:

Post a Comment