கார்மேகக் காட்சி
உயர்வானில் கருமேகத் திரட்சி நெஞ்சில்
.. உருவாக்கும் சிந்தனைகள் வெவ்வேறாகும்
செயலேதோ நடக்கின்ற தோற்றம் காட்டும்
.. சிறுகுன்றின் மேல்மாட்டுமந்தை யென்பார்
புயலடித்ததால் பிய்ந்த குடிசைத் தோற்றம்
.. பூஞ்சோலைக் கிருள்மாலை போர்த்த காட்சி
துயர்தோய்ந்த குடும்பத்தார் உழைத்தலுத்துத்
.. துணியின்றித் துயில்காட்சி அவலம் என்பார்!

மார்பினிலே வேல்பாயப் போர்களத்தில்
.. மாண்டுகிடக்கும் மறவர் மனைவி மக்கள்
போர்வையெனக் கவிழ்ந்தபடி உடல்கள் மீது
.. பொங்கிவரும் கண்ணீரைச் சொரிந்தெழுந்தே
பாரந்தப் பகைவரது தலைகள் கொய்யப்
.. பாய்ந்துசெல என்மகனும் உள்ளான் என்றே
ஆர்த்தெழுந்து துடிக்கின்ற காட்சி என்றும்
.. அருங்கவிஞர் பாப்புனைய வைக்கத் தோன்றும்!

இரண்டுருளும் கருமேகம் பூமி நோக்கி
.. எப்போது பெருமழையாய்க் கொட்டும் என்று
மருண்டபடி மந்தைகளைக் கொட்டில் சேர்க்க
.. மனம்விரைய அதட்டியவா றோட்டிச் செல்லும்
சிறுவர்கள் பரபரப்பாய் இயங்குதற்குச்
.. சேர்ந்ததுவோ வான் திரைஅக் காட்சி என்றே
புருவத்தின் குடையாகக் கைவிரல்கள்
.. பொருந்திடவே வான்நோக்கி நின்றேன் நானே!

No comments:
Post a Comment