அழகு
விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதாய்ப்
பட்டுணர்ந் தோர்கள் பகரவே மாட்டார்
வீம்பென் றாலது விடமுடை பாம்பு!
விவேகம் சீறும் காளைக்குத் தாம்பு!
கண் அவனாகக் கருதிடும் மனைவியைப்
பெண் ஒளி விளக்காய்ப் பேணலே சிறப்பு!
மனநலம் மிக்க மனைவியைத் தக்க
மணம்கொளும் முன்னே மனமொன் றியவரின்
வினைகளே இன்ப துன்பத்தின் வித்தாம்!
கட்டிக் கொண்டவர் கட்டப் பட்டவர்
காதல் முன்னோ கடிமணம் பின்னோ
மோதல் இன்றேல் சாதனை தானே!
வேதனை யிருவர் விவேகமும் தடுக்கலாம்!
எதிர்ப் பார்ப்பென்பது இல்லறம் நல்லறம்
எனிலதில் ஏற்றத் தாழ்வுக் கிடமிலை!
வண்டியை யிழுப்பதில் சண்டித் தனமிலா
மாடுகள் தாமே வீடுபோய்ச் சேரும்!
மதித்தல் என்பது மனநலச் செயலே!
துதித்தல் என்பது பரிவின் விழைவே!
எதையும் சமமென ஏற்றிடும் பக்குவம்
சதையும் நகமுமாய்க் கதையை வளர்க்கும்
அதிகம் என்பது ஆபத்துக் கருகில்
அளவுடன் அமைவதே அழகாய் விளங்கும்
வண்ணப் பூச்சை வாரி யிரைத்த
சித்திரம் சிறப்பெனில் ஒத்துக் கொள்வோமா?
பெண்ணின் பெண்மையும் ஆணின் திண்மையும்
வண்ணம் அளவாய் வரைந்த நல்லோவியம்!
கண்ணில் வலம் இடம் காரணம் வைத்துப்
பார்வையின் சிறப்பைப் பகுத்தறி வாரோ?
வரம்பில் நிற்பதே வழங்கும் சிறப்பை!
இரும்போ துரும்போ எதற்கும் எல்லை
உண்டெனக் கொண்டிடில் உளநிறை வாமே!
பட்டுணர்ந் தோர்கள் பகரவே மாட்டார்
வீம்பென் றாலது விடமுடை பாம்பு!
விவேகம் சீறும் காளைக்குத் தாம்பு!
கண் அவனாகக் கருதிடும் மனைவியைப்
பெண் ஒளி விளக்காய்ப் பேணலே சிறப்பு!
மனநலம் மிக்க மனைவியைத் தக்க
மணம்கொளும் முன்னே மனமொன் றியவரின்
வினைகளே இன்ப துன்பத்தின் வித்தாம்!
கட்டிக் கொண்டவர் கட்டப் பட்டவர்
காதல் முன்னோ கடிமணம் பின்னோ
மோதல் இன்றேல் சாதனை தானே!
வேதனை யிருவர் விவேகமும் தடுக்கலாம்!
எதிர்ப் பார்ப்பென்பது இல்லறம் நல்லறம்
எனிலதில் ஏற்றத் தாழ்வுக் கிடமிலை!
வண்டியை யிழுப்பதில் சண்டித் தனமிலா
மாடுகள் தாமே வீடுபோய்ச் சேரும்!
மதித்தல் என்பது மனநலச் செயலே!
துதித்தல் என்பது பரிவின் விழைவே!
எதையும் சமமென ஏற்றிடும் பக்குவம்
சதையும் நகமுமாய்க் கதையை வளர்க்கும்
அதிகம் என்பது ஆபத்துக் கருகில்
அளவுடன் அமைவதே அழகாய் விளங்கும்
வண்ணப் பூச்சை வாரி யிரைத்த
சித்திரம் சிறப்பெனில் ஒத்துக் கொள்வோமா?
பெண்ணின் பெண்மையும் ஆணின் திண்மையும்
வண்ணம் அளவாய் வரைந்த நல்லோவியம்!
கண்ணில் வலம் இடம் காரணம் வைத்துப்
பார்வையின் சிறப்பைப் பகுத்தறி வாரோ?
வரம்பில் நிற்பதே வழங்கும் சிறப்பை!
இரும்போ துரும்போ எதற்கும் எல்லை
உண்டெனக் கொண்டிடில் உளநிறை வாமே!
No comments:
Post a Comment